

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற 13-வது தமிழ்நாடு யோகா திருவிழாவில், தொடர்ந்து 72,000 விநாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டது. நொளம்பூர் டெக்கலத்தான் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா நடத்தியது. இதை தொடர்ந்து, யோக பாரம்பரியத்தில் குறிப்பிடப்படும் 72,000 நாடிகளை போற்றும் வகையில், “72 ஆயிரம் விநாடிகள் – 72 ஆயிரம் யோகாசனங்கள்” என்ற கருப்பொருளில் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த முயற்சி குளோபல் புக் ஆஃப் யோகா ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து யோகா மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாநில அளவிலான யோகா போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து , போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். மேலும், யுனிவர்சல் யோகா கிளப் மற்றும் தமிழ்நாடு யோகா ஸ்டுடியோஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற விழாவில் , யோகாவின் சிறப்பையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் சிறப்பாக விழா நிறைவு பெற்றது.