
பட்ஜெட்டில் அறிவித்தபடி, கூடுதல் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சென்னை கீழ்கட்டளையில் நடைபெற்ற, தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான, தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.