
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பிரதோச வழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்ற நிலையில், நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பிரசோத வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் என கோஷமிட்டபடி நந்தி பகவானுக்கு நடைபெற்ற அபிசேகங்களை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.


