
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில், பேருந்தில் சட்டவிரோதமாக மூட்டைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 39 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேஷ் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி ஆகிய இருவரையும் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.