க்ரைம்
Trending

ATM-களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் ஏமாற்றி பணம் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி கைது

திண்டுக்கல் நகர் வத்தலகுண்டு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ATM-களில் பணம் எடுக்க உதவுவது போல ATM- கார்டை வாங்கி ரகசிய எண்ணை கேட்டறிந்து ATM- இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் கண்ணிமைக்கும் நேரத்தில் கார்டுக்கு பதிலாக வேறொரு கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விடுவார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS உத்தரவின் பேரில் நகர் DSP. கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கோவை கணபதியை சேர்ந்த முகமதுதம்பி(34) மற்றும் அவரது மனைவி அனிதா(26) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதுபோன்று ATM- கொள்ளையில் ஈடுபட்டு அந்தப் பணம் மூலம் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர் மேலும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், விலை உயர்ந்த செல்போன்கள் வாங்கி சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இரண்டு பேரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button