
பெரம்பலூரில் ரூ.1. 42 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்கள் இடம்பெறாதது. இந்த திட்டமிட்ட செயல் அல்ல என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட 319 பேரில் 219 பேர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.