
திருப்பத்தூரில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் தீயணைப்புத் துறை வீரர்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் காவேரிப்பட்டு பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தேங்காய் பட்டை நார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினரின் வாகனத்தில் தண்ணீர் இல்லாததால், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார்கள் முழுவதும் தீயில் கருகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
