
கேரளாவைச் சேர்ந்த சுமன்ராஜ் என்பவர் இன்று காலை திடீரென உடலில் தீ வைத்துக்கொண்டு கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் ஓடி வந்துள்ளார். இதைக்கண்ட வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தீயை அணைத்து, அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து,போலீசார் நடத்திய விசாரணையில், சுமன்ராஜ் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவரை 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் அவர் மனமுடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து சுமன்ராஜ் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.