க்ரைம்
Trending

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்தவர் கைது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் வழிபாடுகளுக்காக 1930-ல் தானமாக வழங்கப்பட்ட, ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை போலியாக பட்டா மாற்றம் செய்து மோசடி செய்த புகாரில், முன்னாள் தாசில்தார், சார்பதிவாளர்கள் உட்பட 19 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக உசிலம்பட்டியை இளையராஜா, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார், முன்னாள் தாசில்தார் அன்பழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் சிறுமலை பகுதியை சேர்ந்த கவிக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button