க்ரைம்
Trending

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தீக்குளித்த பக்தரால் பரபரப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த சக பக்தர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அந்த நபரைக் காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் வளாகத்தில் தீக்குளித்தவர் கழுகுமலை அருகே கஸ்தூரிரங்கபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சுரேஷ் (38 வயது) என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் திருச்செந்தூர் கோவில் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், அவர் திடீரென்று தீக்குளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button