
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூரில் உள்ள தம்பதியரான புவனேஸ்வரி மற்றும் ஜானகிராமன் இவர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில், நேற்று தாய் வீட்டில் இருந்த புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிற நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் புவனேஸ்வரியை மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக அவரது தாய் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். குழந்தையின் பிறந்தநாளுக்கு 20 சவரன் நகை கேட்டு பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் பெண் உயிரிழந்துள்ளதால், இச்சம்பவம் தொடர்பான விசாரணை கிண்டி கோட்டாட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது.