
நெல்லை மணிமூர்த்திபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். பெயிண்டராக பணியாற்றி வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் திடீரென தாக்கி, தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாஸ்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

