க்ரைம்

ரியல் எஸ்டேட் அதிபரின் கார் ஓட்டுநரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிய கும்பலுக்கு போலீசார் வலைவிச்சு

கடலூர் மாவட்டம் ரங்கரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா. இவருக்கும், ஏழுமலை என்பவருக்கும் தொழில் பிரச்னையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜாவை துக்கணாம்பாக்கம் பகுதியில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் தாக்க வந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து ராஜா தப்பியோடிய நிலையில், அவரது கார் ஓட்டுநர் சசிகுமாரை அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது. மேலும், இந்த தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button