
பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தை ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், உசிலம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த கௌதம் ஆகியோரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த முதற்கட்ட விசாரணையில், பெங்களூரு மடிவாளா பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி, மதுரையில் விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.