
திருவாரூர் மாவட்டம் சின்னகொத்தூர் கிராமத்தில், மிகப்பழமையான செல்லியம்மன் கோவில் உள்ளது. 22-ந்தேதி இரவு, இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், உண்டியல் காணிக்கை பணம் மற்றும் அம்மனுக்கு சொந்தமான தங்க நகைகள், வெள்ளி கவசங்களை திருடிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து, கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து திருடுபோன நகைகளை மீட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன், அமிர்த ரூபன், சூர்யா ஆகிய மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
