
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வரன் தாமாகவே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஜெம் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய திருமாவளவன், தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அவர் தெரிவித்தார்.




