பீகாரின் ககாரியா பகுதியில், ஓடும் ரயிலில் பயணி ஒருவரின் Mobile-ஐ பறிக்க முயன்ற இளைஞரின் திட்டம் தலைகீழாக மாறியது. ரயிலுக்கு வெளியே நின்றபடி, ஜன்னல் வழியாகப் பயணியின் மொபைலைப் பறிக்க முயன்ற திருடனை, உள்ளிருந்த பயணிகள் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அடுத்த ரயில் நிலையம் வரும் வரை அந்தத் திருடன் ரயிலின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி வெளியிலேயே ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டே வர நேர்ந்தது. பயணிகள் அவனது கைகளை இறுக்கமாகப் பிடித்தவாறே, மற்றவர்களுக்கும் ஆபத்தை உணர்த்தி சத்தம் எழுப்பினர்.
ரயில் ககாரியா நிலையத்தை வந்தடைந்ததும், அது நின்ற உடனே பயணிகள் அந்த இளைஞனைப் பத்திரமாக கீழே இறக்கி, அங்கிருந்த ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.