செய்திகள்

கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி – நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

2017-ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கருப்பு உடையணிந்து சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் “நீட் தேர்வை தடை செய்யுங்கள்” என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி சட்டப்பேரவைக்கு வந்திருந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, நீட் தேர்வால் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button