
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பஞ்சராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவருக்கு பஞ்சராஜா பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை சின்னக்கோவிலான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பஞ்சராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசுப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியரே சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
