கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது.
அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் (26) என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
அவருடன் இருந்த நண்பர் பிரசாந்த் (26) தீவிர காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனே மீட்கப்பட்ட பிரசாந்த் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கொடைக்கானல் காவல்துறையினர், ராமரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக, நேற்று முன்தினம் இரவே பூம்பாறையைச் சேர்ந்த ரகு (27) என்பவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ரகுவிற்கும் ராமருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பூம்பாறையில் ராமரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அசம்பாவிதங்களைத் தவிர்க்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்தது ஆனால் ராமரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
மேலும், இக்கொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உயிரிழந்த ராமரின் குடும்பத்தினரும் உறவினர்களும் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் , திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தைநடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு கலைந்து சென்றனர். இதனால் திண்டுக்கல்-திருச்சி பிரதான சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

