செய்திகள்

புதுச்சேரி : பாதுகாவலர்களைத் தாக்கிய சுற்றுலாப் பயணிகள்

புதுச்சேரி காந்தி சிலையின் பின்புறம் கடலில் இறங்கி குளித்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை, பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர்கள் கரைக்கு வருமாறு எச்சரித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில் கடும் கோபமடைந்த 15 சுற்றுலாப் பயணிகள் ஒன்று சேர்ந்து பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தடை செய்யப்பட்ட பகுதியில் குளிப்பதை தட்டிக்கேட்ட பாதுகாவலர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button