
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் பி.டி.பாட்டீல் நகரைச் சேர்ந்த நஜ்முன்னிஷா பேகம் என்ற மூதாட்டி வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே இருந்து பலத்த சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சத்தம் என்னவென்று பார்ப்பதற்காக அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த குரங்கு ஒன்று திடீரென மூதாட்டி மீது பாய்ந்து அவரை கீழே தள்ளியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த நஜ்முன்னிஷா பேகம் மயக்கமடைந்தார்.
இதையடுத்து உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
