செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சில்லரை மதுக்கடைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு புதிய சீருடை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான மாதிரி புகைப்படத்தையும் நிர்வாகம் நேற்று வெளியிட்டது.

புதிய சீருடையில், மேற்பார்வையாளர்களுக்கு வெளிர் நீல நிற சட்டை மற்றும் அடர் நீல நிற பேன்ட் வழங்கப்பட உள்ளது. அதேபோல், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு வெளிர் பழுப்பு நிற சட்டை மற்றும் அடர் சாம்பல் நிற பேன்ட் வழங்கப்பட உள்ளது.

இதை தொடர்ந்து, புதிய சீருடை வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button