க்ரைம்

தூத்துக்குடி : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் மேலசெய்தலை கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கணேஷ்குமார் செப். 13 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, மறுநாள் ராஜிவ்நகர் பகுதியில் கணேஷ்குமார் காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கணேஷ்குமார் கம்பியால் தாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரது நண்பர்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button