
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இரவு பேண்டு வாத்தியத்தை சூடு செய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்டது. அப்போது அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் திடீரென வெடித்து சிதறியது.
இதனால் தீ மளமளவென பரவியது. இதில் கொழுந்துவிட்டு எரிந்த தீயில், அருகில் நின்றிருந்த பணக்கம்பை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் ராகுல் சஞ்சய் ஹரிஹரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, மூவரும் மீட்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சஞ்சய் ஹரிஹரனும், நேற்று காலை சிவனேசனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


