
சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு பாறைப்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசக் கோளாறு மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, நீண்ட நேரமாக தீ எரிந்தும் அதை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இங்கு தீ விபத்துகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


