
தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அளித்த தகவலின் படி மும்பை, தானே பகுதியில் மருந்து கடை நடத்தி வந்த விஜய் ஆதவ் மற்றும் மருந்து கடையில் உதவியாளராக பணியாற்றிய பங்கஜ் என்பவரையும், போலீசார் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 100 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விசாரணையில் அவர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து இணையதளம் மற்றும் நேரடியாக மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

