
திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் தமிழ்நாடு நர்சுகள் பொதுநல சங்கம் மாவட்ட அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் தென் மண்டல செயலாளர் ஜோதி தலைமையில் அமுதா, மாரியம்மாள், தமிழரசி, அழகர்ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. 2017-க்கு பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 600 செவிலியர்கள் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர்