செய்திகள்

எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்

சென்னை ராயபுரத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ மாநில தலைமை அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயபுரம், இப்ராஹிம் சாகிப் சாலையில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமானது. மேலும், நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கணினி, சோபாக்கள், நாற்காலிகள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பீரோ மற்றும் முக்கிய அலுவலகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதனை தொடர்ந்து தீ விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் தீயணைப்பு துறையினர், விரைந்து செயல்பட்டு அரை மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக பி-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலயில், இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக எஸ் டிபிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button