செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விபத்து – 5 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசியை அடுத்துள்ள செங்கமலப்பட்டியில், பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராம்பிரகாஷ், அய்யப்பராஜா, பாண்டித்துரை உள்ளிட்ட 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தால், பலியானோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட உரிமையாளர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button