மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னை எழும்பூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியை கண்டித்தும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உரிய முறையில் வழங்க வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து, காவேரி கமிஷன் அமைத்து பல வருடங்கள் ஆகியும், காவேரி நீர் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

