
மேகதாது அணை கட்டுமான பணியை தடுக்க முதமைச்சர் விஜய் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள எரிசக்தி ஆய்வகம் மற்றும் ஆற்றல் சேமிப்பு அமைப்பில் ஆய்வு மேற்கொண்ட எரிசக்தி துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு தன்னிச்சையாக எந்தவித கட்டுமான பணியையும் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்கவில்லை என தகவல் தெரிவித்த அவர், மேகதாது அணை கட்டுமான பணியை தடுக்க முதமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இவ்விவகாரத்தில் மக்கள் மாளிகை வழிகாட்டுதல் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார்.