அரசியல்

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ ஜாமின் மனு தள்ளுபடி

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன், ‘சட்டசபையில் முதலமைச்சர் விஜய் எலும்பை உடைத்து விடுவோம்’ என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு, தவெக நிர்வாகிகள் தரப்பில் காவல் நிலையங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டன. எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்த நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு குறித்த விசாரணைக்காக மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த நீதிபதி சுமதி, எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button