க்ரைம்

திருப்பூர்; காதலி, காதலியின் தாயார் வெட்டிகொலை – இளைஞ

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, காதல் விவகாரத்தில் இளம்பெண்ணும், அவரது தாயாரையும் வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பச்சாபாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதி பழனிச்சாமி மற்றும் தனலட்சுமி இவர்களுக்கு பூவரசி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்கின்றனர். இந்நிலையில் பூவரசிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக திண்டுக்கல்லை சேர்ந்த அக்ஷய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியிருக்கிறது. அந்த காதலை திருமணமாக்க அக்ஷய் பல முயற்சிகள் எடுத்து பூவரசியின் பெற்றோரிடம், பூவரசியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு இருக்கிறார். ஆனால், இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் யாருக்கும் தெரியாமல் அக்ஷய் பூவரசிக்கு பல்லடம் அருகே உள்ள ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பின்பு பூவரசி வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் தாலியை மறைத்து வைத்து வழக்கம் போல வேலைக்கு சென்று வந்திருக்கிறாள். ஒருநாள் தாயின் கண்களில் தாலி சிக்க வீட்டில் பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கிறது. தினமும் பூவரசியின் வீட்டிற்கு அவள் தந்தை இல்லாத நேரத்தில் வந்து, அவள் தாயிடம் பூவரசியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி வாக்குவாதத்தில் அக்ஷய் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் இன்று காலையில் அதேபோல வீட்டிற்கு வந்த அக்ஷய் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பூவரசி அக்ஷயை வேண்டாம் என சொல்ல ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாய் மற்றும் மகளை சரமாரியாக வெட்டி தப்பியோடியுள்ளார். தொடர்ந்து, இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கும்போது வீடு முழுவதும் ரத்தங்கள் சிதறி கிடக்க ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் வந்த போலீசார் அக்ஷயை கைது செய்து அவரிடம் தீவிரவிசாரணை நடத்தி வருகினறனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button