
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, காதல் விவகாரத்தில் இளம்பெண்ணையும், அவரது தாயாரையும் வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பச்சாபாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதி பழனிச்சாமி மற்றும் தனலட்சுமி இவர்களுக்கு பூவரசி என்ற மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்கின்றனர். இந்நிலையில் பூவரசியும் திண்டுக்கல்லை சேர்ந்த அக்ஷயன் என்பவரும் காதலித்ததாக தெரிகிறது. அவர்கள் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக, அக்ஷய் பூவராசியின் தந்தை இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் அதேபோல வீட்டிற்கு வந்த அக்ஷய் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பூவரசி மற்றும் அவரது தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் அக்ஷயை கைது செய்து அவரிடம் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

