சினிமா

பிற மாநிலங்களிலும் எகிறும் ஜனநாயகன் எதிர்பார்ப்பு: தேசிய அரசியலில் கால் பதிக்கும் விஜய்?

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி வெளியாகின்றது. இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு உலக நாடுகளின் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள ஜனநாயகன் திரைப்பட டிக்கெட்டின் விலை பெங்களூருவில் ரூ.1,000 – ரூ.2,600 எனவும், மும்பையில் ரூ.170 – ரூ.1,020 எனவும் மற்றும் கொச்சியில் ரூ.150 – ரூ.700 என்றும் விற்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இந்திய அளவில் சென்னையில் மட்டும் டிக்கெட்டின் விலை குறைவாக ரூ.183 – ரூ.190 என விற்கப்படுகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில், விஜயின் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பிற மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. முதலமைச்சர் விஜய் குறித்த செய்திகளை பிற மாநிலத்தவரும் ஆர்வமுடன் தெரிந்துகொண்டு வரும் நிலையில், ஜனநாயகன் திரைப்படமும் அதில் இணைந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது கட்சியை தேசிய அளவில் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button