
2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மக்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பது விடுத்தார்.
டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நாம் நினைவு கூரவேண்டும் என்றும் வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் ஒலிக்கிறது, டெல்லி செங்கோட்டையிழும் வந்தே மாதரம் ஒலிக்கிறது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியர்களின் கனவுகள் பெரியதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும், மேக் இன் இந்தியா திட்டத்தால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியா வளர்ச்சி அடைய இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும் என வலியுறுத்திய அவர், நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும் என்றும் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மக்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கு 7 முக்கிய அறவிப்புகளை வெளியிட்டார்.
