க்ரைம்
Trending

தவெக சார்பாக மாபெரும் கல்வி விருது மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

தமிழக வெற்றி கழகம் திண்டுக்கல் மாநகர் 19-வது வார்டு சார்பாக திண்டுக்கல் YMR பட்டி தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 , 12- ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கும் சிறந்ததாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களையும் இந்நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். தங்களது பிள்ளைகள் விருது வாங்குவதை கண்ட பெற்றோர்கள் நெகழ்ச்சி அடைந்தனர்.

இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு , சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளையும் தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் அவர்கள் வழங்கினார். தவெக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

        இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர்  19-வது வார்டு பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தர்மராஜ் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் மாநகராட்சி 19-வது வார்டு செயலாளர் மார்ட்டின் அஜித்ராஜ் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியின் முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button