
சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த ரகசிய தகவலின் பேரில், சோதனை மேற்கொண்ட தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்ற இரண்டு பெரும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாணையில், கைது செய்யப்பட்டது கொல்கத்தாவைச் சேர்ந்த நசிம் என்பதும், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மஹாமுனி என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் சைதாப்பேட்டையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வரும் நிலையில், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. மஹாமுனி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்குகள் உள்ள நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.