க்ரைம்
Trending

மனு கொடுத்த சிறுவர்கள் – உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றிய தவெக நிர்வாகிகள்

திண்டுக்கல் பேகம்பூர் அருகில் உள்ள ஏபி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகரச் செயலாளர் சையது அசாருதீன் கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வகிதா பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கினர்

அப்போது சில சிறுவர்கள் தங்களுக்கு கிரிக்கெட் பேட் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவைப் படித்த மாநகரச் செயலாளர் தேவையான விளையாட்டு உபகரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் .

இதனைத் தொடர்ந்து தவெக மகளிர் அணியைச் சேர்ந்த நதியா சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button