
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் குறித்து அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
சட்டசபையில் முதலமைச்சர் விஜய், தி.மு.க. ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிசா காலத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசியிருந்தார். அவரது பேச்சின்போது வெளிப்பட்ட உடல் மொழி, ஸ்டாலினின் அரசியல் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.
தி. மு.க. எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது த.வெ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், முதலமைச்சரை அவமதித்தல், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மற்றும் எம்.எல்.ஏ. சேகர்பாபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
