
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், ஜான்சன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி பாஸ்கு மேடை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த நோவின்ராஜ்(20), அஜய்ஆண்டனி(19), நோபில் அலெக்ஸ்(22), நந்தகுமார்(20), பாலகிருஷ்ணன்(19) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்வது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 725 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.