கோக்கு மாக்கு

முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டம் – மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தை ஆக்கிரமித்த ஆளுங்கட்சியினரின் நான்கு சக்கர வாகனங்கள் – வழியில்லாமல் நிறுத்திவைக்கப்பட்ட நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – கண்டுகொள்ளாமல் புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்திய ஆளுங்கட்சி நிர்வாகிகள்

2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக விசில் சின்னத்தில் போட்டியிட்ட நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ஜோசப் விஜய் தலைமையில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தனர்.

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களது பிறந்தநாளை கடந்த இரு தினங்களாக அவரது கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் .

திண்டுக்கல்லில் அதிமுக கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் மேயருமான மருதராஜ் அவர்களது மகன் பிரேம்குமார் ( தற்போது இவர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் ) , திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலமான நபரான சர்வேயர் ரத்தினம் ( பழைய கரூர் சாலையில் உள்ள GTN கல்லூரியின் தற்போதைய உரிமையாளர் ) அவர்களது மகன் K.K.R. வெங்கடேஷ் ( திண்டுக்கல் மாநகராட்சியின் 17- வது வார்டு உறுப்பினர் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் ) மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் தர்மா ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தின் இதர நிர்வாகிகளுடன் சேர்ந்து அரசு மாவட்ட தலைமை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த பதிமூன்று குழந்தைகளுக்கு மோதிரம் மற்றும் பரிசுப்பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்காக பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்த தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பிரசவ வார்டு அமைந்துள்ள பகுதி முழுவதிலும் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துவரப்பட்ட குழந்தையுடன் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த ஆம்புலன்ஸ் வாகனம் நகர முடியாமல் சிக்கிக்கொண்டது

பரிசுத்தொகுப்புகளை வழங்கிவிட்டு வெளியில் வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பிரசவ வார்டின் முன்னாள் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியுடன் வந்து இவர்கள் புகைப்படம் எடுத்து முடித்து கிளம்பும்வரை காத்திருந்து வழி கிடைத்தவுடன் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சாதாரண மக்களின் வாகனங்களை கேட்டின் அருகிலேயே தடுத்து நிறுத்தும் மருத்துவமனை நிர்வாகம் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் வாகனத்தை மட்டும் அதுவும் ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு பாதையை மறைத்து நிறுத்த அனுமதித்தது ஏன் என்றும் இதனால் அவசர சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என்றும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button