
மத்திய ஆப்பிரிக்கா சம்போய் கிராமத்தில் உள்ள நானா- மாம்பெரே மாகாணத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்று எதிர்பாராதவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த தவலறிந்து வந்த மீட்புக் குழுவினரும், அப்பகுதி மக்களும் பல மணி நேரம் போராடி இடிந்து விழுந்த சுரங்கத்தில் இருந்து 107 பேரின் உடல்களை மீட்டதாகவும், காயமடைந்த சுரங்க தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சுரங்க தொழிலில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



