செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பு – 70 வயது முதியவர் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் நிலம் வாங்கிய 70 வயது முதியவர் பாலச்சந்தர், தனது நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கடந்த ஜூன் மாதம் நிலத்தை அளவீடு செய்த போது 15½ சென்ட் இருப்பதாக சர்வேயர் தெரிவித்ததாகவும், அருகில் மற்றொருவருக்கு நிலம் அளவீடு செய்த போது தனது நிலத்தையும் சேர்த்து அளவீடு செய்து ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாக பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்த அவர், நிலத்தை அளந்து தருவதாக கூறி தன்னை அலுவலகத்திற்கு வரவழைத்து நீண்ட நேரம் காத்திருக்கச் செய்து அதிகாரிகள் வராமல் மீண்டும் அலைக்கழித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாலச்சந்தர், தனது நிலத்தை உரிய முறையில் அளந்து வழங்க மாவட்ட ஆட்சியரும் தமிழக முதலமைச்சரும் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button