
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஏராளமான நாட்டுப்படகுகள் கரை திரும்பியதன் காரணமாக, மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் மீன்சந்தை பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் சீலா மீன் கிலோ ரூ.1,200 வரையிலும், விளை மீன் ரூ.700, நண்டு ரூ.650, பாறை மீன் ரூ.400 முதல் ரூ.500 வரையும், ஊழி மீன் ரூ.450 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், சாலை மீன் ஒரு கூடை ரூ.3,500 வரை விற்பனையானது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


