க்ரைம்
Trending

350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முத்தழகுபட்டியில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் புனித செபஸ்தியார் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவினை முன்னிட்டு இன்று காலை புனிதர் செபஸ்தியார் திருவுருவம் பொறித்த கொடியினை முத்தழகுப் பட்டியில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து கோவில் வளாகத்தில் வந்தடைந்தது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 60 அடி கொடிக்கம்பத்தில் புனிதரின் கொடி பாடல்கள் ஒலிக்க ஏற்றப்பட்டது.
அப்போது சமாதானத்தை வலியுறுத்தும் புறாக்கள் பறக்க விடப்பட்டது.

வரும் 4ந் தேதி ஊர் பெரிய தனக்காரர் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருவிழா திருப்பலி நடைபெறும். பின்னர் மாலையில் முக்கிய நிகழ்வான சமபந்தி அன்னதானம் நடைபெறும்.

ஊர் பொதுமக்கள் சார்பாகவும் சங்கங்கள் சார்பாகவும் குடும்பங்கள் சார்பாகவும் பக்தர்கள் சார்பாகவும் தங்களது வேண்டுதல்களாக, புனிதருக்கு ஆடு கோழிகள் காணிக்கையாக வழங்கப்பட்டு பின்னர் பலியிடப்பட்டுஅதனை சமைத்து சமபந்தி அன்னதான விழா நடைபெறும்.

நிகழ்ச்சியில் முத்தழகுப்பட்டி, மேட்டுப்பட்டி, ஆரோக்கியமாதா தெரு, மரியநாதபுரம், பஞ்சம்பட்டி மற்றும் 96 பட்டிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ இறைமக்கள் கலந்து கொண்டனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button