செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து 12 பேர் பலி

போபால் : மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நௌரா, உக்ரு உள்ளிட்ட கிராமங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி, தலைவலி, காய்ச்சல், தசை இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் மெத்தனால் நச்சுத்தன்மை காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள 6 மதுபானக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். உயிரிழப்புக்கான உண்மையான காரணம் பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகள் கிடைத்த பின்னரே அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button