செய்திகள்

மும்பையில் சொகுசு கார் விபத்து – மூவர் பலி

மும்பை மெரினா டிரைவ் பகுதியில் இருந்து, ஹஜிஅலி நகர் நோக்கி, சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. மேம்பாலத்தில் பயணிக்கும் போது, அதிவேகமாக சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற சனாய் கஜல் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் என, மொத்தம் 3 பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கார் விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button