திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்செங்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. அந்த பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்பு மாணவிகள் புகை பிடித்ததாக தகவல் கூறப்படுகிறது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகளை தலைமை ஆசிரியர் அழைத்து கண்டித்துள்ளார். இது மட்டுமில்லாமல் மாணவியர்களின் பெற்றோர்களை தலைமை ஆசிரியர் வரவழைத்து மாணவியர்கள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள், ஆகையால் நீங்கள் மாற்றுச்சான்றிதழ்களை வாங்கி செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் மாணவியர்களை தாக்கியதாகவும், 5 மாணவியர்களை தனி அறையில் வைத்து அடித்து, தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை தனது தந்தை பயன்படுத்திய BP மாத்திரைகள் கொண்டு வந்து 2 தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி ஒருவர் மட்டும் உயர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
செய்திகள்
16 hours ago
அஞ்சல் சேமிப்பு கணக்குகள் அதிகரிப்பு
13 hours ago
சாலையில் குவிந்த மணலால் தொடரும் விபத்து – பொதுமக்கள் கோரிக்கை
13 hours ago
கோவை : குப்பை சேகரிக்க 43 பேட்டரி வாகனங்கள் – அமைச்சர் சம்பத்குமார்
15 hours ago
நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார்
16 hours ago
அஞ்சல் சேமிப்பு கணக்குகள் அதிகரிப்பு
16 hours ago
டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்
16 hours ago
நீலகிரி : பெட்ரோல் கேன் வெடித்து தீ விபத்து – இருவர் உயிரிழப்பு
2 days ago
சிவகங்கை : லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய டீசல்
2 days ago
கோவை : கால்வாயில் ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
2 days ago
தென்காசி நகராட்சியில் TPO இல்லாததால் பணிகள் முடக்கம் – பொதுமக்கள் அவதி
2 days ago
தூத்துக்குடி : பேருந்து நடத்துனர் தற்கொலை முயற்சி – பணிமனை மேலாளர் மீது குடும்பத்தினர் புகார்
Related Articles
Check Also
Close


